Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

100 ஆண்டுகளில் இல்லாத அளவு கடல்நீர் உயர்வு! மூழ்கப் போகும் உலகம்? எச்சரிக்கை வெளியிட்ட ஐ.நா

உலகில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கடல்நீர் மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
33 கோடியே 25 இலட்சத்து 19 ஆயிரம் கன மைல் அளவு கொண்ட கடல், இந்த பூமியின் குளிர் வெப்பநிலையை சமன் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
ஆனால், ஐ.நா.வும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை ஆராய்ச்சியாளர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் கடல்நீர் மட்டம் உயர்வு குறித்து 36 நாடுகளை சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.
நாசா விஞ்ஞானியான ஜோஷ் வில்லீஸ் அளித்துள்ள அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கடலும் வெப்பமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 
இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னர் மதிப்பிட்டதை விட கடல்நீர் மட்டம் உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 100 ஆண்டுகளை விட தற்போது கடல்நீர் மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments