Home » » கல்முனை மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கற்றல் வள நிலையம் : மாணவர்களிடம் கையளித்தார் ஹரீஸ் எம்.பி !!

கல்முனை மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கற்றல் வள நிலையம் : மாணவர்களிடம் கையளித்தார் ஹரீஸ் எம்.பி !!



- நூருல் ஹுதா உமர் -

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் கல்வியமைச்சினால் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருக்கும் 500 பாடசாலை கட்டிடங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட இருக்கின்றது.இத் திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்திற்குற்பட்ட கல்முனை கமு/ அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டடம் இன்று மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

இவ் கட்டட திறப்பு விழா நிகழ்வு இன்று (9) திங்கட்கிழமை பாடசாலையில் பிரதி அதிபர் ஐ.எல்.எம் ஜின்னா தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற  இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.


இந் நிகழ்வின் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் அப்துக் ஜலீல் அவர்களும் ,விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார், ஏ.எம் பைறோஸ், எம்.எஸ் நிசார்(ஜேபி), ஏ.சி.ஏ.சத்தார் ஆகியோருடன் கல்முனை பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |