தான் நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச இன்றும் தெரிவித்துள்ளார்.
அம்பலன்தொட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தல் தொடர்பில் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
எனினும் இந்த தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிட உள்ளளேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மைக்காலங்களில் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக பல மேடைகளில் சஜித் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments