Home » » இலங்கையர்களின் புதிய சாதனை! அதிசய கிரக மண்டலம் கண்டுபிடிப்பு ; விரைவில் விளக்கம்

இலங்கையர்களின் புதிய சாதனை! அதிசய கிரக மண்டலம் கண்டுபிடிப்பு ; விரைவில் விளக்கம்

இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.
நாசாவின் கேப்ரல் டூ திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நட்சத்திரக் கூட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்தப் புதிய கிரக மண்டலம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பிரதிப் பணிப்பாளர் சிந்தன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கேப்ரல் டூ திட்டத்தின் கீழ் நட்சத்திரங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கமைய, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வுகளுக்கு அமைய, புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கிரக மண்டலத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10.30 அளவில் ஆர்த்தர் சீ க்ளாக் மையத்தில், அது குறித்து விளக்கமளிக்க உள்ளனர் என்றும் அதன் பிரதிப் பணிப்பாளர் சிந்தன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |