Home » » மைத்திரி விட்ட தவறு! மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த?

மைத்திரி விட்ட தவறு! மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த?


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் வரை பிற்போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
19 ஆவது அரசியலமைப்புக்கான வர்த்தமானி 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்டது.19 ஆவது திருத்தத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்ட 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 திகதி முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 15 வரையே ஜனாதிபதியின் பதவிக்காலம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் தாமதமாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பில் சட்ட வல்லுனர்கள் மற்றும் சட்ட பிரிவினரிடம் ஜனாதிபதி வினவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏதாவது ஒரு வகையில் இதற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால், 19வது திருத்ததின் பாதிப்புகள் ஏற்படாது. அதனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதற்றமடையாமல் அமைதியாக இருப்பது பல தரப்பினருக்கு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |