Home » » விமானத்தில் மோதியது பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி (Video)

விமானத்தில் மோதியது பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி (Video)

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது.
இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.
விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு Ural Airlines A321 ரகத்தை சேர்ந்த விமானம் மொஸ்கோ Zhukovsky விமான ஓடுபாதையில் ஓடி மேல் எழுந்து நடுவானுக்கு சென்று கொண்டிருந்தபோது அதன் மீது பறவை ஒன்று மோதியது.
எஞ்சினில் பறவை மோதியதால், விமானம் உடனடியாக தடுமாறத் தொடங்கியது. இதனை கவினத்த விமானி டேமிர் யுசுபோ, விமானத்தை லாவகமாக கொண்டு சென்றார்.
பின்னர் ஒருகட்டத்தில் விமானத்தை உடனடியாக, மொஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் சோள வயல் ஒன்றின் அருகே விமானத்தை கொண்டு சென்று எஞ்சினை குறைத்து மெதுவாக தரையிறக்கத் தொடங்கினார். அப்போது பெரும் சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் பெரும் பதற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.
விமானம் வெடித்துச் சிதறாததால் அதில் இருந்த 233 பேரும் உயிர்பிழைத்தனர். 23 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யா அரசு பாராட்டியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |