Home » » எதனையும் எதிர்கொள்ள தயார்! அமைச்சர் சஜித்

எதனையும் எதிர்கொள்ள தயார்! அமைச்சர் சஜித்

எந்தவொரு தடைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல - மாளிகாவத்த பிரதேசத்திலுள்ள விகாரையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதில் கவனம் செலுத்தியுள்ளன.
அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து அந்த கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஆர்வம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், இதற்கு கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியின் தான் தயாரக உள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கான உயிரையும் கொடுக்க தயாராகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே, எந்தவொரு தடைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கான நாடாளுமன்ற குழு மற்றும் செயற்குழு கூட்டுவது தொடர்பிலான வலியுறுத்தல் கடிதமொன்றை கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இன்னும் சில உறுப்பினர்களின் ஊடாக குறித்த கடிதம் அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |