Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள்!

எதிர்காலத்தில் மட்டக்களப்பு நகருக்குள் வருகைதரும் வாகனங்களின் எண்ணிக்கையினை கருத்தில்கொண்டு வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புகையிர நிலையத்தின் குறுக்கு வீதியை அகலமாக்கி அவற்றினை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
குறித்த வீதியை அகலமாக்குமாறு மட்டகளப்பின் மிக நீண்டகாலமாக இருந்துவந்த கோரிக்கை இன்று மட்டக்களப்பு மாநகரசபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் குறித்த வீதியை அகலமாக்கி புனரமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து புகையிரத விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்வுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் குறித்த வீதியை புனரமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச களஞ்சிய சாலை என்பனவற்றின் ஆதரவுடன் வீதிகளை அகலமாக்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டதுடன் இன்று அதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வீதி அகலமாக்கப்படுவதன் மூலம் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவர்கள்இஇந்துக்கல்லூரி மாணவர்கள்இபுகையிரத நிலையத்திற்கு செல்வோர்இமட்டக்களப்பு நகருக்கு வருவோர் மிக குறைந்த நேரத்தில் வந்துசெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதனடிப்படையில் குறித்த வீதியினை அகலமாக்கி புனரமைக்கும் பணிகள் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மாநகரசபை உறுப்பினர்களான து.மதன், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments