Advertisement

Responsive Advertisement

ஷஹ்ரானின் மனைவி இரகசிய சாட்சியம்: மதரஸா பாடசாலைகளுக்கு வரும் ஆபத்து!

தாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் மதரஸா பாடசாலைகளை மூடிவிடுபவராகவும், சரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குபவராகவும் இருப்பார் என அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதானியான மொஹமட் ஷஹ்ரானின் மனைவி கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய சாட்சியத்தை வழங்கினார்.
நாட்டு மக்களின் பொருளதார நிலைமையை உயர்த்துவதற்காக தமது அரசாங்கத்தின் கீழ் 10 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்ப இலங்கை விருப்பத்துடன் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்திப் பார்வை அமைகின்றது.

Post a Comment

0 Comments