Advertisement

Responsive Advertisement

2012,2013 வருட வெளிவாரி பட்டாதாரிகள் 2500 பேருக்கு இம்மாதம் நியமனம்


வெளிவாரி பட்டதாரிகளை அரச துறையின் பயிலுனராக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 2012, 2013 வருடங்களில் வெளிவாரி பட்டதாரிகள் 2500 பேருக்கு அரச துறையில் பயிலுனராகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டாகும் போது வேலையற்ற வெளிவாரிப் பட்டதாரிகள் 20000 பேர் அளவில் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது உள்வாரிப் பட்டதாரிகள் 20000 பேருக்கு அரச துறையில் பயிலுனராகச் சேர்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments