இலங்கையில் சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த 64 முஸ்லிம்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி கருப்பையா ஜீவராணி முன்னிலையில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
0 Comments