குறித்த சிறுவன் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“கெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்த முஹம்மத் நௌபர் அப்துல்லா எனும் சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள வழங்கியுள்ள வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தன்னுடைய தந்தை சுற்றுலாவிற்காக தன்னை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்றார். இதன் போது அங்குள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தோம்.
தாங்கள் குறித்த வீட்டிற்கு செல்லும்போது அங்கு 4 அல்லது 5 மௌலவிமார்கள் இருந்ததார்கள். பின்னர் இரவாகும் போது 28 அல்லது 30 பேர் வரை அங்கு வந்ததாகவும் அன்றிரவு அங்கு உறங்கியதாவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதன்போது பெரிய துப்பாக்கி ஒன்று மற்றும் சிறிய துப்பாக்கி ஒன்றையும் காட்டியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார். அத்துடன் வெடிபொருள் தயாரிக்கும் விதம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கப்பட்டது. அந்த வகையில், தனக்கு அபூஹசம் என பெயர் வைக்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகவும், அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னரே தங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாகவும் குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
0 Comments