மாதம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும், மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலக குழு உறுப்பினர் என அறியப்படும் 32 வயதான சம்பத் நிரோஷன் எனப்படும் ஆனமாலு ரங்க, 22 வயதுடைய மற்றொருவருமே நேற்றைய தினம் மாதம்பிட்டி மயானம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று மாதம்பிட்டிய பொது மயானத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை ஒன்றில் பங்கேற்க அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
இதன்போதே முச்சக்கர வண்டியொன்றில் வந்த நால்வர் பாரிய வாள்களை கொண்டு கொடூரமாக இவ்விருவரையும் வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments