Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் தனது பதவியை இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை

(பாறுக் ஷிஹான்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் தனது பதவியை இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை என நிர்வாக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை(15) காலை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனம் சம்மந்தமான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கப்பட்டமையால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் இன்று வருகை தரவில்லை.

இவ்விடயம் குறித்து உப பிரதேச செயலளாரை தொடர்பு கொண்ட போது விடுமுறையில் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை(17) அன்று புதிய கணக்காளருக்கு வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் கடமையை உத்தியோக பூர்வமாக அவர் பொறுப்பெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நீதி கோரி அண்மையில் உண்ணாவிரதப்போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும்இ அரசிடமும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொடர் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தனர்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட கணக்காளர் தனது பதவியை இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லை

Rating: 4.5
Diposkan Oleh:
Team New

Post a Comment

0 Comments