Home » » கல்முனையில் சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பிற்கு இதுவே காரணம்?

கல்முனையில் சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பிற்கு இதுவே காரணம்?

கல்முனையில் தமிழருக்கு வரலாறு இல்லையென ஹரீஸ் எம்.பி கூறியதை வன்மையாக கண்டிப்பதாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்முனையில் தமிழர்தான் பூர்வீகமாக வாழ்ந்து வந்தவர்கள் என்பதை தான் நிரூபிப்பதாகவும், முடிந்தால் பகிரங்கமான விவாதத்திற்கு வருமாறு அவரை அழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காரைதீவு பிரதேசசபை அமர்வு நேற்றைய தினம் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் தமது உரிமைகளை அல்லது அபிவிருத்திகளை கோரும் எந்த சந்தர்ப்பத்திலாவது நாங்கள் அதனைத் தடுத்திருக்கிறோமா? அல்லது எதிர்த்திருக்கிறோமா?
தமிழ் மக்களின் வாக்குகளால் முழுக்க முழுக்க நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சகோதர முஸ்லிம்களின் அத்தனை அபிலாசைகளுக்கும் விட்டுக் கொடுத்து வந்ததே வரலாறு.
சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்கப்பட வேண்டும். அதேபோல் கல்முனை உபபிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். அந்த மக்கள் அவற்றை கோருவதில் தவறில்லை.
அரசாங்கம் இவற்றைத்தர முனைந்தாலும் குறுக்கே ஒருவர் நின்றுகொண்டு ஆட்டம் காட்டுவதை மக்கள் தொடர்ந்து அனுமதிக்க கூடாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடக்கம் ஆளுநர் வரை தொடர்ச்சியாக விட்டுக் கொடுத்து வந்தது த.தே.கூட்டமைப்பு.
ஆனால் இதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை. கூட்டமைப்பில் தமிழ் மக்களுக்கான வெறுப்பும் அதுவே. அதன் வெளிப்பாடே கல்முனையில் சுமந்திரனுக்கு இடம்பெற்ற எதிர்ப்பு எனலாம்.
கல்முனை வடக்கு உபபிரதேச செயலக தரமுயர்த்தல் இன்று த.தே.கூட்டமைப்பிற்கு பெரும்சவாலாக மாறியுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைமைகள், ஹரீசனின் விருப்புக்கு கடந்த காலங்களில் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்து வந்ததே இன்று தமிழ் மக்கள், கூட்டமைப்பு மீது பாரிய வெறுப்புடன் இருக்க காரணம்.
அதன் ஓரங்கமே தேரர்களின் பிரசன்னத்தை விரும்பியது. எமது பிரச்சினைகளை எம் தலைமைகள் தீர்க்காவிடின் மற்றயவரை நாடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. 30 வருடமாக கோரப்பட்டு வந்த இச்செயலகத்திற்கு தராமலிருப்பது அரசாங்கமல்ல. இந்த ஹரீஸ் என்ற இனவாதிதான் தடைக்குப்பிரதான காரணம்.
ஒரு இனம் தனது உரிமையை கேட்கின்ற போது அதனை வழங்க வேண்டாம் என்று எதிர்போராட்டம் நடத்திய கேவலம் நடந்தேறியது கல்முனையில் தான். அது நியாயமற்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |