Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல்? மக்கள் மத்தியில் பதற்ற நிலை..

மட்டக்களப்பில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி நபர் ஒருவரால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பின் புத்தூர் பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியே இனந்தெரியாத நபர் ஒருவரால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
இன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் திமிலதீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இதன்போது போக்குவரத்து பொலிஸார் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பதற்றம் தணிந்துவரும் நிலையில் இன்றைய தினம் திடீரென்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் மீண்டுமொரு பதற்றமான நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

Post a Comment

0 Comments