Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் இராணுவத்தால் சுட்டுக்கொலை!

காலி மாவட்டத்தின் அக்மீமன பகுதியில் நபர் ஒருவர்மீது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அக்மீமன பகுதியிலுள்ள உபானந்த வித்தியாலயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் துப்பாக்கியை குறித்த நபர் பறிக்க முற்பட்டதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த நபர் இராணுவத்தின் உத்தரவையும் மீறி குறித்த பாடசாலை வளாகத்தினுள் பிரவேசிக்க முற்பட்டதனால் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதன்பின்னர் பலியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுதொடர்பான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments