Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தம்! பாடசாலை மூடல்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர்.
மக்களுக்கும், பாடசாலைகளுக்கும் எந்தவித முன்னறிவித்தல்களும் வழங்கப்படாத நிலையில் இந்த நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், அங்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததையடுத்து, அப்பகுதியிலுள்ள உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பெற்றோர் குவிந்ததுடன், தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
இதன் காரணமாக இரண்டு பாடசாலைகளையும் இடையில் மூடவேண்டிய நிலையேற்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments