Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விசேட அதிரடிப்படையால் முற்றுகையிடப்பட்ட மர்ம வீடு! கைது செய்யப்பட்ட சந்தேகிகள்!



நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்று காலை முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர். குறித்த வீடு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 402 ஐ போன்கள்,17400 சிம் கார்ட்கள், 60 ரவுட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த வீட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2 இலங்கையர்களும் 1 சீன நாட்டைச் சேர்ந்த பிரஜையும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments