Home » » முழுமையாக அரேபிய தேசமாக மாறிய காத்தான்குடி! வெடிக்கும் புதிய சர்ச்சை

முழுமையாக அரேபிய தேசமாக மாறிய காத்தான்குடி! வெடிக்கும் புதிய சர்ச்சை

கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை மீறி அரேபிய மொழிக்கு முதன்மையிடம் வழங்கியுள்ளமை விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியின் நுழைவிடத்தில் உள்ள வரவேற்பு பலகையில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிக்கு மேலதிகமாக அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அரபு நாடுகளை போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள காத்தான்குடியில், தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளது. அரேபிய மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள காட்சி பலகையிலும் அரேபிய மொழியே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் முதலில் அரேபிய மொழியிலும், பின்னர் தமிழ் சிங்கள மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடிக்குள் நுழையும் வாயிலில் அமைந்துள்ள பெயர் பலகையும் அரேபிய மொழியிலேயே காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் மேலும் பல நகரங்களில் இதே நிலைமை காணப்படுகிறது. அத்துடன் திருகோணமலை - மூதூர் நகரில் அரச நிறுவனமான வலய கல்வி அலுவலகத்திலும் அரேபிய மொழியில் வரவேற்பு பலகை காணப்படுகின்றது.
அத்துடன் காத்தாக்குடி முற்றிலும் அரேபிய மொழிக்கு இணையான வகையில் மாறிக் கொண்டிருப்பதாக குறித்த ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |