Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அவசர அழைப்பு விடுத்தார் மைத்திரி; இன்றிரவு முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா?

சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றிரவு அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் அவசர அழைப்பு கிடைத்துள்ளதென அந்த தகவல் கூறுகிறது.
இதன்படி அமைச்சர்கள் யாரேனும் தற்போது கொழும்புக்கு வெளியில் இருந்தால் உடனடியாக தமது காரியங்களை இடை நிறுத்திவிட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நிலைமைகளினையடுத்து மைத்திரியின் இந்த அவசர அழைப்பு பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கூட்டணிப் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் நிலையில் அதுகுறித்த அறிவிப்போ அல்லது நாட்டில் எற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னரான விசாரணைகள், வாக்குமூலங்கள் குறித்த அறிவிப்போ இன்று இரவு அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments