Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மீண்டும் ஆரம்பித்தது சாகும்வரையான உண்ணாப் போராட்டம்!

நாட்டின் அரசியலில் இருந்து பௌத்த பிக்குமார் அனைவரும் உடனடியாக விலகவேண்டுமென்று கோரி இளைஞர் ஒருவர் சாகும்வரையிலான உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஹிங்குரானை நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலேயே மேற்படி சோராச்சிலாகே டொன் டிலான் தாரக என்ற இளைஞர் இந்த உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இவர் தனது போராட்டத்தின் கோரிக்கையாக, அரசியலில் பிக்குமாரின் செல்வாக்கு நிறைந்துவிட்டதென்றும் ஆதலால் அனைத்து பிக்குமாரும் அரசியலிலிருந்து விலகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னர் நாட்டிலிருந்து சிங்கள மக்கள் பலரின் ஆதரவு கிடைத்திருந்தது. அத்துடன் பல பிக்குமாரும் அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்தை ஆதரித்ததுடன் அவரை நேரில் சென்றும் பார்வையிட்டுவந்தனர்.
எவ்வாறாயினும் புத்தரின் உன்னத நோக்கம் தெரியாமல் பிக்குமார் முட்டாள்தனமாக செயற்பட்டுவருவதாக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து பல்வேறு எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.
இந்த நிலையிலேயே மேற்படி இளைஞரும் தனது உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments