Home » » ரிஷார்ட் - அசாத் சாலி - ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா?? தடுமாறும் மைத்திரி..

ரிஷார்ட் - அசாத் சாலி - ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிக்கு இன்று மாலைக்குள் மூடுவிழா?? தடுமாறும் மைத்திரி..

அமைச்சர் ரிஷார்ட் , ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் ஆரம்பித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபாலவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.
இதனால் அவர் சில கடுமையான முடிவுகளை எடுக்கத் துணிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நேற்றுக் காலை புதுடில்லியில் தன்னுடன் தங்கியுள்ள இலங்கை அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்திரி.
ரத்தன தேரரின் கோரிக்கையை கவனிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளதை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தி இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன் அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் விடயத்தை நீங்கள் பாருங்கள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நான் பதவியில் இருந்து அகற்றுகிறேன் என ஒருமித்த முடிவுக்குள் இருவரும் வந்துள்ளனர்.

நேற்றிரவு நாடு திரும்பிய கையோடு மைத்திரி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருப்பதாக அறிய முடிகிறது.
அதன்படி அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் தற்காலிகமாக பதவி விலக ஜனாதிபதி கோரவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பதவி விலகல் நிரந்தரமானது என்பதுடன் இனி வாழ் நாளில் இப்படி ஒரு பதவியை கனவில் கூட நினைப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத மட்டுமல்லாது மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி இன்று மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரி இன்று மாலைக்குள் பௌத்த பீடத்தின் முடிவுகளிற்கு கட்டுப்பட்டு மேற்குறித்தவர்களை பதவி நீக்க நுாறு வீத வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |