Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயன்தருமா? பனைமர நிதியம்



இலங்கையில் தற்போதுள்ள அரசியல் ராஜதந்திரம் மிக்க தலைவர்களில் ரணில் முக்கியமானவர் இவருடைய தந்திரமே இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்பதற்கான காரணம் வரவு செலவு திட்டத்தை வெற்றி பெற கம்பரெலிய என்னும் திட்டத்தை உருவாக்கி அதனை பாரளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக செயல்வடிவம் கொடுத்ததோடு வரவு செலவு திட்டத்தையும் வெற்றி அடைய செய்தார்.உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின் ரணில் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக உருவாகி விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவகாரம் அமைச்சர் ரிஷாட்பதீயுதீனின் பிரச்சினை ஆகும்.

இந்நிலையில் எதிர் கட்சியில் உள்ள பெரும்பான்மை இன கட்சிகள் அமைச்சர் ரிஷாட் பதீயுதினுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு ஆதவரவாக வாக்களிக்க உள்ளனர் இதே வேளை எதிர்கட்சி வரிசையில் உள்ள தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர் மேலும் சில ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நம்பிக்கை இல்லப்பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என சக பாரளுமன்ற உறுப்பினர்களை கேட்டிருந்தார்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு றிசாட்டுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டிருப்பது போன்றதான அறிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன இதன் காரணமாக  தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  மீது கடும் அதிருப்பதியில் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காத ரணில் அரசு பனைமர நிதியம் ஒன்றை அவசரமாக உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்கி ரிஷாட் விடயத்தை தனக்கு சாதகமாக நகர்த்துவதோடு தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் திருப்தி படுத்த எடுத்த நாடகமே இந்த பனை மர நிதியம் ஆகும்
.
நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட்பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 5 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் விசேட இணைப்பாளர் சமிந்த வாசல தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண பனை அபிவிருத்திக்கு என 5 பில்லியன் ரூபா நிதியினை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 2.5 பில்லியன் நிதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் வழங்கப்படும்.ஆனால் வடமாகாண குடிநீர் வசதிகளுக்கு வெறும் 5 மில்லியன் ரூபா பணத்தையே ஒதுக்கியுள்ளார். வடமாகாணத்தில் பாரிய ஓர் பிரச்சினை மக்களின் குடிநீர் பிரச்சினையே. இதற்கு வெறும் 5 மில்லியன் பணம் போதுமாக இருக்குமா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனவே பனைமர நிதியம் என்பது வடக்கில் உள்ள பனைகள் மெல்ல மெல்ல அழிவடைந்து வருவது போல் தமிழ் மக்களையும்; அவர்களுடைய உரிமைகளையும் ரிஷாட்பதீயுதினை காப்பாற்றுவதன் மூலம் அழிப்பதற்கான ஒரு அத்திவாரமே இவ் பனை நிதியமாகும்.

Post a Comment

0 Comments