Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூரில் முஸ்லீம் சட்டத்தரணியின் மனைவி போதை மாத்திரைகளுடன் கைது!!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகளும் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (27) காலை ஏறாவூர் பகுதியில் உள்ள வீடுகளை இராணுவத்தினர் சோதனை இட்டபோது, போதை மாத்திரைகளும் கஞ்சாவும் சிக்கியது. ஏறாவூர் 01ஆம் குறிச்சி, முனையார் வளவு வீதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் இருந்தே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 95 போதைமாத்திரைகளும் ஒரு தொகை கஞ்சாவும் மீட்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் சட்டத்தரணியில்லாத காரணத்தினால் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டதுடன் போதைப்பொருட்களும் கஞ்சாவும் கைதுசெய்யப்பட்டவரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சட்டத்தரணியின் மனைவி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments