Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்வியமைச்சரின் தீர்மானம் -ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் புள்ளிகளை தேசிய ரீதியாக தரப்படுத்துவதை கைவிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்த நிலையில் அமைச்சரின் தீர்மானத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில் தேசிய தரப்படுத்தல் வெளியிடப்படமாட்டாதென கல்வியமைச்சர் நேற்றையதினம் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் தீர்மானம் வரவேற்கத்தக்கதென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரின் தீர்மானம் உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

Post a Comment

0 Comments