Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தனது அரசியல் வாழ்வுக்கான இறுதி முடிவை எடுப்பாரா ஜனாதிபதி?



எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவைக்கவுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றை முடக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வாராக இருந்தால் அதுவே அவரின் அரசியல் வாழ்வுக்கான இறுதி முடிவாக இருக்குமென ஐ.தே.க வின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திடீரென கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சில முடிவுகளை உறுதியாக தெரிவித்திருந்தார்.இதன்படி ஜனாதிபதி அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கப்போவதில்லையென அச்சுறுத்தியதாகவும் தெரிவுக்குழுவால் தாம் இலக்குவைக்கப்பட்டால் அமைச்சரவைக்கு சமுகமளிக்கமாட்டேன் எனத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன என ஜனாதிபதி செயலக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின்படி நாடாளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.இவ்வாறு நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்தால் கோப்குழு உட்பட நாடாளுமன்றால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து குழுக்களும் செயலிழக்கும்.
அத்துடன் நாடாளுமன்ற செயற்பாட்டில் இணைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் கூட முதல்வாசிப்புக்கு எடுக்கப்படாது வலுவற்றதாக்கப்படும்.
இதேவேளை நாடாளுமன்ற அமர்வை முடக்க ஜனாதிபதி முடிவெடுப்பாராயின் அனைத்து கட்சிகளும் இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.தே.க.வின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் அதுவே அவரின் அரசியல் வாழ்வுக்கான இறுதி முடிவாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிக்க மாட்டார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்றை ஜனாதிபதி ஒத்திவைத்தாலும் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் செயலிழக்கமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.இதற்கு அவர் பின்வரும் காரணங்களையும் தெரிவிக்கிறார்.
எனவே ஜனாதிபதி நாடாளுமன்றை ஒத்திவைத்தாலும் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.
எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமாகும்.

Post a Comment

0 Comments