Home » » ஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம்! தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்!!

ஆரம்பமானது சாகும் வரையான உண்ணாப் போராட்டம்! தமிழர்களுடன் பௌத்த தேரரும் குதித்தார்!!



அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்,அழகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதேவேளை இவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பிலும் உண்ணாவிரதம் போராட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி மட்டக்களப்பிலும் காந்தி பூங்கா முன்பாக முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் ” அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் இருப்பு நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாகி வருகிறது . அதில் ஒன்றே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது . இதற்கு காரணம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கூட்டமைப்பை விட அரசாங்கம், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
இத்தகைய அரசாங்கத்தினை தாங்கி பிடித்துக் கொண்டு கூட்டமைப்பு உள்ளது . எம்மை பொறுத்த வரை எம் மக்களின் இருப்பே முக்கியம். அதற்கு நாம் எவ்வாறும் குரல் கொடுக்கவும் போராடவும் தயார். அரசாங்கம் சாதகமான பதிலை தராது விடின் கிழக்கு மாகாணம் முழுவதும் போராட்டத்தை முன்னேடுப்போம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |