Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் மழை! மகிழ்ச்சியில் மக்கள்

நீண்டகால கடுமையான வறட்சியின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை தொடக்கம் கடும் மழைபெய்துவருகின்றது.
பல மாதங்களாக மழையில்லாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் பலத்த மழைபெய்துவருவதன் காரணமாக விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி மற்றும் உஸ்ண காலநிலையினால் பல மாதங்களாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்த நிலையில் கடும் மழைபெய்துவருவதன் காரணமாக உஸ்ண நிலை நீங்கியுள்ளது.
இன்று ஆரம்பித்துள்ள மழையுடனான கால நிலை சில தினங்களுக்கு தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments