Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையிலிருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் தயார்! ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள தகவல்


இலங்கையிலிருந்து 7 ஆயிரம் குடும்பங்கள் வெளியேறுவதற்காக, இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, வசதி படைத்தவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,


“பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் 2000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மீதமான அனைவரும் அப்பாவிகள்.
எனினும், முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், கடைகளையும் எரித்தவர்கள், ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments