Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை! நேற்று வழங்கப்பட்டது அனுமதி

இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நேற்றைய தினம் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்ச அபராதம் 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3000 ரூபா முதல் 25000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தினால் ஒரு இலட்சத்து 50000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு இரு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரத்தையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments