Home » » மட்டக்களப்பில் வைத்தியத் துறைக்கு பேராபத்து!!!!

மட்டக்களப்பில் வைத்தியத் துறைக்கு பேராபத்து!!!!


பல தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வைத்தியர் செய்கு சியாப்தீனின் சகோதரியின் கணவனுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி முக்கிய பதவி ஒன்றை வழங்க கபீர் ஹாசீம் தீவிர முயற்சி செய்து வருவதாக கொழும்பு சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நேரடி தொடர்பை கொண்ட குறித்த வைத்தியரான வாஜித் Dr.Wajith (Dental surgeon) இனை மட்டக்களப்புக்கு நியமிப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அதிகாரி எதிர்வரும் 10ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகின்ற நிலையில் இவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன நல்லிணக்கம் என கூறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு ஓர வஞ்சனை செய்கின்றது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகளை முஸ்லிம் பகுதிகளிற்கு மாத்திரம் கொடுத்து தமிழர்களை வஞ்சித்ததோடு, தற்போது இன ரீதியாகவும் தமிழர்களை ஓரங்கட்ட பார்க்கின்றார் பைசால் காசிம்.
சர்ச்சைக்குரிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய குறித்த வைத்தியரை மட்டக்களப்பு சுகாதார துறையின் முக்கிய பதவிக்கு நியமித்து மீண்டும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி என கவலை வெளியிட்டுள்ள மங்களராம விகாராதிபதி
இது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் நிதானமாக செயற்பட முற்பட்ட போது அதற்கு எதிர்மறையாக குறித்த வைத்தியரை நியமிக்க தீவிர முயற்சி செய்து வருவதுடன் மட்டக்களப்பிலும் பாரிய கரு கலைப்பு ஒன்றை செய்ய தயாராகி வருகின்றனர் என ஆதங்கப் பட்ட மங்களராம விகாராதிபதி
இவ் விடயத்தில் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களும் புத்தி கூர்மையுடன் வேகமாக செயற்பட வேண்டியதுடன் அணி சேர வேண்டும் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி தெரிவித்ததுடன் இப்படி எதிர்ப்புக்களையும் மீறி மட்டக்களப்பு சுகாதார துறையின் முக்கிய நியமனம் இடம் பெற்றால் பாரிய போராட்டம் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தின் அனைத்து அரச நிறுவனங்களும் முடக்கி போராட்டம் நடக்கும் என கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக மட்டக்கப்பில் இருக்கக் கூடிய எமது பிராந்திய செய்தியாளர் விக்டர் பெரேரா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிகளவாக தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன் நியமனம் தேவையற்றது ஒன்று அப்படி தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்தில் எடுக்காமல் இன் நியமனம் இடம் பெறுமாக தமிழ் மக்களை மதிக்காத செயற்பாடு என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |