Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொடிய பயங்கரவாதிகளால் இலங்கை எனும் ஆத்மாவை தோற்கடிக்க முடியாது!



பயங்கரவாதத்தின் கொடிய செயல்கள் இலங்கை எனும் ஆத்மாவை தோற்கடிக்காது என்று இதிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மக்களுடன் என்றும் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மோடி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தார்.
இந்த நிலையில் அதுகுறித்த தகவலொன்றையும் மோடி அதனது உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.
”இலங்கை மீண்டும் உயர்ந்த நிலைக்கு செல்லும் என நான் நம்புகிறேன். பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்கள் இலங்கை என்ற ஆத்மாவை தோற்கடிக்க முடியாது. இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது”
என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற புகைப்படங்களுடன் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments