Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட தேவாலயம் சென்றார் மோடி!



இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட பிரதமர் மோடி அண்மையில் முஸ்லீம் பயங்கரவாதத்தாக்குதலிற்குள்ளான புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேத அழிவு புகைப்படங்களையும் பார்வையிட்டார். இதன்போது இலங்கை பிரதமரும் பிரசன்னமாகியிருந்தார்.
இதனை அடுத்து ஜனாதிபதி செயலகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிங்களப் பாரம்பரிய கண்டி நடனத்துடன் பெரும் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொட்டும் மழையிலும் அவரை குடை பிடித்து வரவேற்றார்.

Post a Comment

0 Comments