Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் பொன்சேகா

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர்கள் மீது உடனடியாக பயங்கரவாதிகள் முத்திரை குத்த முடியாது என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கவைக்கழக மாணவர்களின் கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது உடனடியாக பயங்கரவாதிகள் முத்திரை குத்த முடியாது.
நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 
இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்றன. இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. இதுதான் உண்மை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments