Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளை ஆரம்பிப்பதை உடன் தாமதப்படுத்துமாறு அஸ்கிரிய மாநாயக்கர் அவசர கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பும் வரை பாடசாலைகளை மீண்டும் ஒரு வாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அஸ்கிரிய மாநாயக்கர்கள் அரசாங்கத்திடம் இது தொடர்பான அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டாம் தவனைக்கான கற்றல் நடவடிக்கைகள் கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக கற்றல் நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டன.
இந்நிலையில், நாளைய தினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் பாடசாலைகளை தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கல்வி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிவித்தலில் எந்த ஒரு மாற்றமும் இது வரை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
6 தொடக்கம் 13 வரையான ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
1 தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 13ம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாக கடந்த 22ம் திகதி ஆரம்பமாக வேண்டிய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments