Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் மற்றுமொரு வைத்தியசாலையிலும் கருத்தடை சத்திரசிகிச்சை! அம்பலமாகும் புதிய தகவல்


குருணாகல் வைத்தியசாலையில் இடம்பெற்றது போன்றதான கருத்தடை சத்திரசிகிச்சைகள், கண்டி - பேராதனை வைத்தியசாலையிலும் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
பேராதனை வைத்தியசாலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இது மிகவும் பழைய சம்பவமாகும். 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் இது இடம்பெற்றிருக்கிறது.


ஷிராஜ் என்கிற முஸ்லிம் மருத்துவர் மற்றும் முஸ்லிம் பெண் மருத்துவர் ஆகியோர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது சட்டவிரோதமாக கருத்தடை செய்திருப்பதாக அந்த வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை கூடத்திலிருந்தவர்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்துள்ளன.
சில தாய்மாரும் இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையிட்டிருக்கின்றனர். இது குறித்து சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்தபோது ஷிராஜ் என்ற வைத்தியர் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபரான பெண் வைத்தியர் மாயமாகிவிட்டார். சிலவேளை அவர் வெளிநாடு சென்றிருக்கலாம். இதுபற்றி ஆராய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments