கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை கிராமத்தின் எல்லையிலுள்ள நெல்வயலுக்கு அருகாமையிலுள்ள புதருக்குள்ளே ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலங்களாக இடம்பெறும் தொடர் சோதனைகளின் நிமிர்த்தம் குறித்த சொட்கண் துப்பாக்கி அதற்கான ரவைகளும்,ஏ.கே 47 ரக துப்பாக்கியின் ரவைகள் சிலவும், இரண்டு பெரிய வாள்களையுமே வீசிச்சென்றுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த விஷேட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த ஆயுதங்களை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தால் சேனைக்குடியிருப்பு தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் மூன்று முறைகள் சம்மாந்துறை காளிகோவில் ஆயுதங்கள் வீசப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: