Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு மீட்பு

மட்டக்களப்பு நகர், கண்ணகி அம்மன் ஆலய வீதியின் களப்பு பகுதியில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிளைமோர் குண்டையே இராணுவத்தினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் அப்பகுதியை சுத்தம் செய்யும் போது களப்பில் இருந்த கிளைமோர் குண்டை அவதானித்து அது தொடர்பில் பிரதி மேஜருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிளைமோர் குண்டை மீட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த கிளைமோர் குண்டு விடுதலைப் புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என கண்டறிந்துள்ளனர்.



Post a Comment

0 Comments