Home » » நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழிப்பதல்

நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழிப்பதல்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு புரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அரசினால் முன்னெடுத்துச் செல்லப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.
இவ்வாறு மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட் இடப்பட்டுஅபிவிருத்தி செய்யப்படவிருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட ” சந்தை வீதியின் நிர்மாணப்பணிகளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய  கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சிஅமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணிஎம்.எஸ்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்களுக்கு தேவையானஅபிவிருத்தி பணிகளை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்த முடியாதுஅதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில்விக்ரம சிங்க அவர்களின் வழிகாட்டலிலும் அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய அளவிலானவேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் காலடிக்கு கொண்டு சேரக்க வேண்டிய பாரிய அபாறுப்புமக்கள் பிரதிநிதிகளான எங்களையே சாரும்.
சந்தர்ப்பம் ஒன்று வரும் போது அதனை  உதாசீனம் செய்து விட்டு பின்னர் மீண்டுமொருமுறை இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை பெறமுடியாது.இன்று மக்களின் அதிதியவசியமான தேவைகளுள் வீதிகள் , வடிகான்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கல்முனை , சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிவுள்ள வீதிகள் சுருங்கி தற்போது ஒழுங்கைகளாகவும் , ஓடைகளாகவும் மாறி வருவது மிகவும் மன வேதனையை தருகின்றது. வீட்டுக்கு படி கட்டி, படிக்கு சுவர்கட்டி , சுவருக்கு படி கட்டி  இவ்வாறு வளவுகள் நீண்டு இன்று வீதிகளால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைக்கு நிலமை மாறி வருகின்றது. இந்த நிலமை மக்கள் மனங்களில் இருந்து மாற வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமேயானால்  எதிர்கால சந்ததியியனருக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எம் அனைவரையுமே சாரும்.
என்று தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |