Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட் இடப்பட்டு அபிவிருத்தி




( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜபீர்)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட ” சந்தை வீதி ”யின் நிர்மாணப்பணிகளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஐ.எல்.ஏ.பாரி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனீபா , கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அஸீம் , எம்.ஐ.எம்.அப்துல் மனாப் , அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி இளைஞர் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் , முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் இணைப்பாளா் அஸ்வான் மௌலானா உள்ளிட்ட ஐக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தர்கள் , பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments