Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தீவிரவாதிகளுக்கு ஓர் கோரிக்கை

எஞ்சியுள்ள தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து விடுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் தீவிரவாத குழுக்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதகாப்புப் படையினரிடம் சரணடைந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட முடியும் என உலமா சபையின் ஊடக செயலாளர் பாசிலி பாரூக் தெரிவித்துள்ளார்.
தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசீமினால் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் அடங்கிய இறுவட்டுக்கள் பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தீவிரவாதத்தை எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகள் குறித்து முஸ்லிம்களே முறைப்பாடு செய்தும் தகவல்களை வழங்கியும் வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments