Home » » கேள்விக் குறியாகும் இலங்கையின் எதிர்காலம்! இப்படியொரு அவல நிலையா?

கேள்விக் குறியாகும் இலங்கையின் எதிர்காலம்! இப்படியொரு அவல நிலையா?

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பூச்சிய நிலையை எட்டியுள்ளது.
இதன் காரணமாக பரபரப்பாக செயற்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
கடந்த மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து பெருமளவு சுற்றுலா பயணிகள் மீண்டும் தமது நாட்டுக்கு சென்றுள்ளனர். புதிய சுற்றுலா பயணிகள் வருகை முற்றாக தடைப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் குறித்து பல்வேறு நாடுகளினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையும் இதற்கு காரணமாகும்.
சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பாரிய வருமானத்தை பெற்று வருகிறது. இந்த வருடத்தில் 21 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் முற்றாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை உருவாக்கும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |