Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனதில் தீவிரவாத சிந்தனைகள் விதைக்கப்படுவது இஸ்லாமிய மதரஸாக்களிலேயே... தேரர் ஆவேசம்

இந்த நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய மதரஸாக்களில்தான் மதவாதம் ஊட்டப்படுகின்றது. சிறுவயது முதலே தீவிரவாத சிந்தனை விதைக்கப்படுகின்றது என கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்கொலை தாக்குதலில் ஒருவர் ஈடுபடுவதாக இருந்தால், அவரது உள்ளம் அதற்காகவே பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய மதரஸாக்களில் தான் மதவாதம் ஊட்டப்படுகின்றது. சிறுவயது முதலே மத்ரஸாக்களில் இந்த தீவிரவாத சிந்தனை விதைக்கப்படுகின்றது.
தனது உயிரை மதத்துக்காக தியாகம் செய்ய போதிக்கப்படும் முக்கிய நிலையமே இந்த மதரஸாவாகும்.
இந்த மத்ரஸாக்களுக்கான ஆலோசனைகள் கல்வி அமைச்சிடமிருந்து கோரப்படுவதுமில்லை. அவர்களுக்கு செல்ல அனுமதிப்பதுமில்லை.
எமது நாட்டில் எதிர்காலத்தில் இந்த அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், இந்த மத்ரஸா பற்றிய கண்காணிப்பை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments