Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல்


பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையல் அறைக்கு கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமையல் அறை பகுதி சுத்தமற்றை வகையில் காணப்பட்ட நிலையிலேயே அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்கள் பயிலும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நாளாந்தம் இந்த சமையல் அறையிலிருந்தே இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதனாலும் சமையல் மேற்கொள்வதற்கு பொருத்தமாக இடமாக இதனை வைத்திருக்காததனாலும் பயிலுநர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும் இது குறித்து முறைபாடு கிடைத்ததையடுத்து நேற்று இந்த சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சமையலறை திறக்கும் வரை வெளியிலிருந்து பயிலுநர்களுக்கு சாப்பாடு பெற்றுக்கொடுக்குமாறு உரியவர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments