Home » » நுண்கடனை செலுத்தாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் -ஐ.நாவின் விசேட நிபுணர்

நுண்கடனை செலுத்தாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் -ஐ.நாவின் விசேட நிபுணர்


இலங்கையில் நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் தெரியவில்லை என்றும் இந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமை குடும்பங்களேயே நுண்டகடன் நிறுவனம் அதிகம் நாடுகின்றது.அந்தவகையில் அம்மக்களுக்கு கடனை வழங்கும் நிறுவனங்கள் அதனை மீள செலுத்த முடியாத நிலைமை உருவாகும்போதும் மிகவும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார்.
மேலும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தாத பெண்களிடம், பாலியல் வன்முறையில் ஈடுபட முனைவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.ஆகைாயால் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் அம்மக்கள், நுண்கடன்களை மீள் செலுத்துவதனை நிறுத்த உதவ வேண்டும்” என ஜுவான் ப்பலோ போல்ஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |