Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன


யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் வலிகாமம் வடக்கில் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காணிகளுக்குச் சொந்தமான மக்கள் ஆர்வத்துடன் தமது வீடுகளை பார்த்துவருகின்றனர்.
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 45 ஏக்கர் காணிகளின் அடிப்படையில், தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.
மேலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளிலுள்ள கணிசமான வீடுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் சில வீடுகள் திருத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே நீண்டகாலப் பாவனை இருந்துவந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நேரில் கண்டவர்களால் கூறப்பட்டுள்ளது.
Vali Norh 3 Vali Norh 4 Vali Norh

Post a Comment

0 Comments