Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

100 கோடிக்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு; வெளிநாட்டவர்கள் கைது: கொழும்பை உலுக்கிய சம்பவம்!

கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பில் வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கொள்ளுப்பிட்டியில் 90 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 1080 மில்லியன் ரூபாய் பெறுமதியானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹெரோயினுடன் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments