எதிர்வரும் திங்கட்கிழமை ரணிலைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் அமையவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து சில உறுப்பினர்கள் பிரிந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலரே இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அந்த தகவலில் கூறபட்டுள்ளது.
இதுகுறித்து குறித்த உறுப்பினர்கள் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப்படுத்தியபோது, உறுப்பினர்களின் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு தான் மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, பைஸர் முஸ்தப்பா உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் துமிந்த திஸாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைய உள்ளனர்.
மேற்படி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதுதொடர்பில் ரணில் தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments