நாட்டில் தற்போது க.பொ.த சாதரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சை மண்டபத்துக்குள் முக மூடியணிந்தவாறு புகுந்த இளைஞர்கள் இருவர், பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவியைக் கத்தியால் குத்த முற்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்புச் சம்பவம் மொனராகலை நக்கல ராஜயானந்த மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் இன்று நடந்துள்ளது.
மாணவியைத் தாக்கி, கத்தியால் குத்த முற்பட்ட இளைஞர்களை, பரீட்சை நிலையப் பொறுப்பாளர் தடுத்து நிறுத்தினார். ஏனையவர்களும் சம்பவ இடத்தில் கூடியதால், இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
”இளைஞர்களில் ஒருவரை,மாணவி காதலித்துள்ளார். அதனைப் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் மாணவி, இளைஞனுடான காதலைக் கைவிட்டுள்ளார்.
அதனால் கோபமடைந்த இளைஞன் தனது நண்பனுடன் வந்து மாணவியைத் தாக்கினார்” என்று முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments